கைலாசா கரன்ஸி எப்படி இருக்கும்? பிரபல நடிகர் கேள்வி

இந்திய போலீசாரால் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, கைலாசா’ என்ற ஒரு தனிநாட்டை ஆரம்பித்துள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த நாடு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகவும், இரண்டு விதமான கரன்சிகள் வெளியிட தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார் உள் நாட்டு கரன்சி ஒன்று, வெளிநாட்டு கரன்சி ஒன்று, தயாராக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் ஐநாவின் சம்மதத்தோடு எல்லாமே
 

இந்திய போலீசாரால் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, கைலாசா’ என்ற ஒரு தனிநாட்டை ஆரம்பித்துள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த நாடு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகவும், இரண்டு விதமான கரன்சிகள் வெளியிட தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்

உள் நாட்டு கரன்சி ஒன்று, வெளிநாட்டு கரன்சி ஒன்று, தயாராக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் ஐநாவின் சம்மதத்தோடு எல்லாமே சட்டபூர்வமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்

நித்தியானந்தாவின் இந்த அறிவிப்பு குறித்து பலரும் காமெடியாக கிண்டலடித்து வந்த நிலையில் தமிழ் நடிகர் நட்டி நட்ராஜ் இது குறித்து கூறி தனது டுவிட்டரில் கூறும்போது ’அந்த கைலாசா கரன்சி எப்படி இருக்கும் என்பதை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்’ என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த டுவிட்டர் பதிவிற்கு பல கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web