நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனாவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி!
 
நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக தற்போது மிகவும் பரவுகின்ற நோய் கொரோனா. இந்த கொரோனா முதலில் சீன நாட்டில் உருவானதாக கருதப்படுகிறது. பின்னர் சீனாவிலிருந்து உலகமெங்கும் இந்த கொரோனா நோய் பரவியது. இந்தியாவில் கொரோனா அது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பரவியது. மக்கள் மத்தியில் மிகவும் வேகமாகப் பரவியது .இதனால் மக்கள் கடந்த ஆண்டு மிகப்பெரிய இன்னல்களில் சந்தித்தனர்.  கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்திய அரசானது முழு ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும்  அமல்படுத்தியது.

corona

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா அதிகரித்து உள்ளதாக தகவல், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த மூன்று தினங்களாக கொரோனா பாதிப்பில் முதலிடத்தை உலக அளவில் இந்தியா பிடித்துள்ளது. மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். தற்போது பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர் தமிழிலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்துடன்  2.0 என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அக்ஷய் குமார் தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று மருத்துவமனையில் சேர்த்ததாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

From around the web