உதவி இயக்குனர்களுக்கு வீடு வீடாகத் தேடிச் சென்று உணவுப்பொருட்கள் வழங்கும் நடிகர் ஆதி!!

தமிழ், தெலுங்கு நடிகரான நடிகர் ஆதி கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட உதவி இயக்குனர்களின் குடும்பத்தினர் பலருக்கும் உணவுப் பொருட்களை வழங்கி வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதாவது இந்தியாவில் கால் பதித்த கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும்பொருட்டு, ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல தொழில்களும் பாதிக்கப்பட்டது, அதில் சினிமாவினைப் பொறுத்தவரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட, சினிமாத் தொழிலாளர்கள்
 
உதவி இயக்குனர்களுக்கு வீடு வீடாகத் தேடிச் சென்று உணவுப்பொருட்கள் வழங்கும் நடிகர் ஆதி!!

தமிழ், தெலுங்கு நடிகரான நடிகர் ஆதி கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட உதவி இயக்குனர்களின் குடும்பத்தினர் பலருக்கும் உணவுப் பொருட்களை வழங்கி வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அதாவது இந்தியாவில் கால் பதித்த கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும்பொருட்டு, ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல தொழில்களும் பாதிக்கப்பட்டது, அதில் சினிமாவினைப் பொறுத்தவரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட, சினிமாத் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.   

உதவி இயக்குனர்களுக்கு வீடு வீடாகத் தேடிச் சென்று உணவுப்பொருட்கள் வழங்கும் நடிகர் ஆதி!!

அந்தவகையில் தமிழ், தெலுங்கு நடிகரான  நடிகர் ஆதி, Let’s the Bridge என்ற அமைப்பின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சமைப்பதற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார்.

இதுகுறித்து நடிகர் ஆதி கூறியதாவது, “ஊரடங்கிற்குப் பின்னர் சினிமாத் தொழில் பெரிய அளவில் நசுக்கப்பட்டுள்ளது, அதனால் உதவி இயக்குனர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய நினைத்தேன். அதனால் உதவி இயக்குனர்களின் பட்டியலை இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து பெற்றேன்.

அதன்பின்னர் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கி Let’s the Bridge என்ற அமைப்பின் உதவியுடன் கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், நெசப்பாக்கம், வளசரவாக்கம், போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று ஒரு மாதத்திற்கு சமையலுக்குத் தேவையான சமையல் பொருட்களை வழங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

From around the web