த்ரிஷ்யம் 2’ படத்திற்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்!

 

மோகன்லால் நடித்த திரிஷ்யம் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம் 2’ திரைப்படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ளது 

இந்த படத்தின் முதல்கட்ட விமர்சனமே பாசிட்டிவாக வெளிவந்து இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மோகன்லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் 2’திரைப்படம் குறித்த விமர்சனங்கள் இன்று டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

Driyshyam

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் விறுவிறுப்பு பிளஸ் சஸ்பென்ஸ் ஆகிய இரண்டும் சம அளவில் இருப்பதாகவும் குறிப்பாக இன்டர்வல் பிளாக் வேற லெவலில் இருப்பதாகவும் டுவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர் 

கடைசி 45 நிமிடங்கள் கொண்ட கிளைமாக்ஸ் காட்சியில் மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் ஆகிய இருவரும் புகுந்து விளையாடி உள்ளனர் என்பதும் இப்படி ஒரு கிளைமஸ் காட்சியை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்றும் டிவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர் 

மோகன்லால் மீனா ஆகியவர்களின் நடிப்பு முதல் பாகத்தை விட அருமையாக இருப்பதாகவும் இந்த படம் முதல் பாகத்தை விட இருமடங்கு வெற்றி பெறும் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web