சாக்ஷியால் கதறி அழுத அபிராமி!

நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மாவின் வெளியேற்றம் குறித்து அபிராமி, சாக்ஷி, முகின், ஷெரீன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, முகினுடன் சாக்ஷி பேசுவதால் அபிராமிக்கு கோபம் ஏற்படுகிறதா என்று கமல்ஹாசன் கேட்டதை சாக்ஷி, அபிராமியிடம் கேட்டார். அதற்கு அபிராமி இப்போது இதை பேச வேண்டாம் என்று கோபமாக கூறியவாறு உள்ளே சென்றுவிட்டார். சந்திப்புக் கூடத்தில் லோஸ்லியா தோளில் சாய்ந்தவாறு சாக்ஷி கேட்ட கேள்வியை நினைத்து அழத் தொடங்கினார் அபிராமி. நான் சண்டையிட்டு எழுந்து வரும்போது, முகின் தன்னை சமாதானம் படுத்தவில்லை என்று
 

நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மாவின் வெளியேற்றம் குறித்து அபிராமி, சாக்‌ஷி, முகின், ஷெரீன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, முகினுடன் சாக்‌ஷி பேசுவதால் அபிராமிக்கு கோபம் ஏற்படுகிறதா என்று கமல்ஹாசன் கேட்டதை சாக்‌ஷி, அபிராமியிடம் கேட்டார். அதற்கு அபிராமி இப்போது இதை பேச வேண்டாம் என்று கோபமாக கூறியவாறு உள்ளே சென்றுவிட்டார். 

சாக்ஷியால் கதறி அழுத அபிராமி!


சந்திப்புக் கூடத்தில் லோஸ்லியா தோளில் சாய்ந்தவாறு சாக்‌ஷி கேட்ட கேள்வியை நினைத்து அழத் தொடங்கினார் அபிராமி. நான் சண்டையிட்டு எழுந்து வரும்போது, முகின் தன்னை சமாதானம் படுத்தவில்லை என்று கூறி லோஸ்லியாவிடம் அழுதார்.

லோஸ்லியா சமாதானம் கூறியும் அபிராமி கேட்கவில்லை. பிறகு படுக்கை அறைக்கு சென்றும் அழுதார் அபிராமி. இதை கவனித்த உடன் முகின் உள்ளே வந்தார். அப்போது நடந்த விஷயங்களின் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலானது சண்டையில் முடியும்படி ஆனது.

இதனால் பொறுமையிழந்த முகின் கோபப்பட்டு கட்டிலின் ஒரு பகுதியை உடைத்துவிட்டார். இதை கவனித்த மற்ற போட்டியாளர்கள் முகினை அழைத்துச் சென்று சமாதானம் செய்தனர். அதை தொடர்ந்து, அபிராமியை சமாதானப்படுத்தினார் முகின்.

From around the web