அப்துல் கலாம் கேரக்டரில் காமெடி நடிகர்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். தெலுங்கில் தயாராகும் இந்தப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அப்துல்கலாம் வேடத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர், அலி பாஷா நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அப்துல் கலாம் வேடத்தில் ஒரு காமெடி
 
அப்துல் கலாம் கேரக்டரில் காமெடி நடிகர்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

தெலுங்கில் தயாராகும் இந்தப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அப்துல்கலாம் வேடத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர், அலி பாஷா நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அப்துல் கலாம் வேடத்தில் ஒரு காமெடி நடிகரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அலி பாஷா மிகச்சிறந்த நடிகர் என்றும், கண்டிப்பாக அவர் அப்துல் கலாம் பெயரையும் மரியாதையையும் காப்பாற்றுவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

From around the web