தற்கொலைக்கு முயன்ற அப்பாஸ்.... ஏன் தெரியுமா?

நானே தற்கொலை எண்ணங்கள் கொண்டிருந்தேன். பின் நான் என் வாழ்க்கையை மாற்றினேன்.
 

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவரை அந்த காலத்தில் ரசிக்காத பெண்களே இல்லை என்றே கூறலாம்.

அடுத்தடுத்து நல்ல படங்கள் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைந்தது. அதன்பின் சில விளம்பரங்களில் நடித்த அவர் மொத்தமாக சினிமா பக்கமே காணவில்லை.

அண்மையில் ஒரு பேட்டியில் அவர், நான் ஆஸ்திரேலியா சென்று ஒரு பொது பேச்சாளராக சான்றிதழ் பெற்றேன். தற்கொலை எண்ணம் கொண்ட இளைஞர்களிடம் நான் உரையாடுவேன்.

நானே தற்கொலை எண்ணங்கள் கொண்டிருந்தேன். பின் நான் என் வாழ்க்கையை மாற்றினேன். எனவே அவர்களும் அதைச் செய்ய முடியும் என்பதை அவர்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு நபரையாவது என்னால் காப்பாற்ற முடிந்தால், இந்த ஆண்டுகள் நான் நடித்த படங்களை விட அர்த்தமுள்ளதாகவும், நோக்கமாகவும் இருக்கலாம் என்று நினைத்தேன் என தெரிவித்துள்ளார்.

From around the web