அப்பாடா... ஒரு வழியா ஆரி சிரிச்சிட்டார்: ஹவுஸ்மேட்ஸ் மகிழ்ச்சி

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரி, எப்போதும் அடுத்தவர்களின் குறையை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார் என்றும் சீரியஸாகவே இருப்பார் என்றும் சகஜமாக யாரிடமும் பழக மாட்டார் என்றும் சக போட்டியாளர்கள் குற்றமாக கூறி வருகின்றனர்
ஆனால் ஆரியின் ரசிகர்கள் இதனை ஒப்புக் கொள்வதில்லை. ஆரி எப்பொழுதும் போல் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்றும், ஆனால் அவரது சிரிப்பு அவரை குறை கூறும் மற்றவர்களுக்குத்தான் தெரியவில்லை என்று கூறுகின்றனர்
இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு வாக்கியம் வருகிறது. அந்த வாக்கியத்தை வைத்து அவர்கள் விளக்கம் சொல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ’காலத்தை அழியேல் என்ற வாக்கியம் ஆரிக்கு வருகிறது
இதனை அடுத்து ’இதுக்கு விளக்கம் சொல்லி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறி சிரிக்கிறார். உடனே சக போட்டியாளர்கள் ’அப்பாடா ஆரியும் சிரித்து விட்டார் என மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்
ரியோ ஆரியை கட்டிப்பிடித்துக்கொண்டு ’ஆரி முதல் முதலாக ஒரு கமென்ட்டை ஜாலியாக எடுத்துக் கொண்டு சிரித்துள்ளார்’ என்று கூறியுள்ளார். அதேபோல் ரம்யா ’நல்ல முன்னேற்றம் ஆரியிடம்’ என்று குறிப்பிட்டுள்ளார்
#Day95 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/GUScdS0vVP
— Vijay Television (@vijaytelevision) January 7, 2021