முதன் முறையாக பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத ஆரி!..

எனக்கு எங்கே எல்லோரையும் பிடிக்கும், ஆனால் அவர்கள் நான் இதுவரை செய்தது அனைத்தும் போட்டிக்காகவும், பொறாமைக்காகவும் செய்தேன் என கூறுகின்றனர்".
 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒரு வழியாக இறுதி வாரத்தை எட்டியுள்ளது, மேலும் இந்த முதல்முறை பிக்பாஸ் வீட்டில் ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ்க்கு சென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி நேற்று முக்கிய போட்டியாளரான ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார், இதனால் மீதம் உள்ள ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா உள்ளிட்டோர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நிஷா மற்றும் ஆரி இருவரும் தனியாக அமர்ந்து பேசியுள்ளனர், அப்போது ஆரி "எனக்கு எங்கே எல்லோரையும் பிடிக்கும், ஆனால் அவர்கள் நான் இதுவரை செய்தது அனைத்தும் போட்டிக்காகவும், பொறாமைக்காகவும் செய்தேன் என கூறுகின்றனர்".

இதற்கு பதிலளித்த நிஷா " நான் உங்களுடன் 70 நாட்கள் இந்த வீட்டில் இருந்துளேன், நீங்கள் ஒரு நாள் கூட பொறாமையில் செய்ததில்லை" என கூறியுள்ளார்.

From around the web