எப்போதும் குறை சொல்லும் ஆரி... குறை சொல்லும் டாஸ்க்கிள் கடைசி இடம்... குழப்புறாய்ங்களே?

டிக்கெட் டூ பினாலே டாஸ்க் தற்போது கொஞ்சம் மொக்கையாக தான் போய்க்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே கொரோனா ரொம்ப படுத்திருச்சு. 

 

நாமளும் ஏன் அதையே செய்யணும் என பிக்பாஸ் கிரியேட்டிவ் டீம் நினைத்து விட்டார்கள் போல. பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி என பல்வேறு போட்டிகளை ரூம் போட்டு யோசித்து போட்டியாளர்களுக்கு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று குறை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் குறித்த குறைகளை சொல்ல வேண்டும். டாஸ்க் முடிந்த பிறகு போட்டியாளர்கள் தங்களை தாங்களே வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார். இதில் கடைசி இடத்துக்கு ஆரியும், 6-வது இடத்துக்கு பாலாவும் வாக்கெடுப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் பிக்பாஸ் போட்டியாளர்களை கிண்டலடித்து வருகின்றனர். அதாவது ஆரி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார் என சொன்ன அனைவரும் தற்போது அவருக்கு ஏன் இந்த டாஸ்க்கில் கடைசி இடத்தை அளித்தனர்? என்பது தான் அவர்களின் கேள்வி.


 

From around the web