டிஆர்பியை அதிகரிக்க இந்த வாரம் நுழையும் ஆல்யா மானசா!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி கமல்ஹாசனின் காரசாரமான விமர்சனங்களுடன் தொடங்கியது. தன் மீது பல தரப்பட்ட வகையில் விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும், ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படியொரு நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கலாமா என்பன போன்ற கேள்விகள் கேட்கப்படுவதாக அவர் பேசினார். அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி நடைபெற்ற முதல் எலிமினேஷன் கடந்த 7ம் தேதி நடைபெற்றது. அப்போது ஃபாத்திமா பாபு முதல் போட்டியாளராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதை தொடர்ந்து 2வது எலிமினேஷன் நடைமுறை கடந்த
 

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி கமல்ஹாசனின் காரசாரமான விமர்சனங்களுடன் தொடங்கியது. தன் மீது பல தரப்பட்ட வகையில் விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும், ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படியொரு நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கலாமா என்பன போன்ற கேள்விகள் கேட்கப்படுவதாக அவர் பேசினார். 

அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி நடைபெற்ற முதல் எலிமினேஷன் கடந்த 7ம் தேதி நடைபெற்றது. அப்போது ஃபாத்திமா பாபு முதல் போட்டியாளராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

டிஆர்பியை அதிகரிக்க இந்த வாரம் நுழையும் ஆல்யா மானசா!அதை தொடர்ந்து 2வது எலிமினேஷன் நடைமுறை கடந்த 14ம் தேதி நடந்தது. அதில், வனிதா விஜயகுமார் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

அதுவரை வனிதாவை திட்டித் தீர்த்த பார்வையாளர்கள், அவர் வெளியேறிய பின்  அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், நிகழ்ச்சி மிகவும் சலிப்பு ஏற்படுவதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். 

இதனால் குறைந்த டிஆர்பியை ஈடுகட்ட தயாரிப்புக் குழு புதியதாக இரண்டு போட்டியாளர்களை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒருவர் பிரபல தொலைக்காட்சி நடிகை ஆலியா மான்சா என்றும், மற்றொருவர் முன்னாள் நடிகை விசித்திரா என்றும் தெரியவருகிறது. 

ஆலியா மானசா பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இந்த வாரம் அவர் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web