சூர்யாவின் 40வது படத்தில் ஒரு டுவிஸ்ட்: முதல்முறையாக இணையும் பிரபல நடிகர்!

 

நடிகர் சூர்யாவின் 40வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் சூர்யாவின் 40வது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் 

sathyaraj

சூர்யா மற்றும் சத்யராஜ் இணைந்து முதல்முறையாக ஒரே படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் டுவிஸ்ட் அறிவிப்பு இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், சூர்யாவின் தந்தையாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

டி இமான் இசையமைக்கும் இந்த படம் சூர்யாவுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்றும் கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


 

From around the web