ஓடிடி ரிலீசிலும் சிக்கலா? விஷாலின் ’சக்ரா’ படத்திற்கு வந்த சோதனை

சூர்யா நடித்த சூரரைப்போற்று உள்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாகும் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விஷால் நடித்த சக்ரா’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்பட்டது இது குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்து விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது இந்த நிலையில் திடீர் சோதனையாக ‘சக்ரா’ ஹிந்தி டப்பிங் உரிமையை வாங்கிய நிறுவனம் திடீரென இந்த படம் தங்களுக்கு வேண்டாம் என்றும் கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடுங்கள் என்றும் கேட்பதாகவும் இதனால் விஷால் அதிர்ச்சி
 

ஓடிடி ரிலீசிலும் சிக்கலா? விஷாலின் ’சக்ரா’ படத்திற்கு வந்த சோதனை

சூர்யா நடித்த சூரரைப்போற்று உள்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாகும் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விஷால் நடித்த சக்ரா’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்பட்டது

இது குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்து விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது இந்த நிலையில் திடீர் சோதனையாக ‘சக்ரா’ ஹிந்தி டப்பிங் உரிமையை வாங்கிய நிறுவனம் திடீரென இந்த படம் தங்களுக்கு வேண்டாம் என்றும் கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடுங்கள் என்றும் கேட்பதாகவும் இதனால் விஷால் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது

ஓடிடியில் ரிலீஸ் செய்வதால் இந்த படத்தை வேண்டாம் என்று ஹிந்தி டப்பிங் வாங்கிய நிறுவனம் கூறுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியாமல் விஷால் தரப்பினர் குழப்பத்தில் உள்ளனர்
இதற்கு ’சக்ரா’ படத்திற்கு எதிராக சதி செய்பவர்களில் வேலையாகத்தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த நிலையில் ‘சக்ரா’ படத்தை அடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தையும் ஓடிடியில் விற்பனை செய்ய விஷால் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த படம் சக்ராவை விட அதிக விலைக்கு போக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

From around the web