ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு ஒரு முன்னோட்டமா? ‘மாநாடு’ பரபரப்பு!

 
ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு ஒரு முன்னோட்டமா? ‘மாநாடு’ பரபரப்பு!

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று காலை வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்றுமுன்னர் நவம்பர் 21 ஆம் தேதி 10:44 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

maanadu firstlook

அதுமட்டுமின்றி பஸ்ட் லுக் போஸ்டருக்கு முன்னோட்டமாக ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை சிம்பு தொழுகையில் ஈடுபட்டு இருப்பது போன்றும் சுற்றி அரசியல் கலவரம் நடப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரின் முன்னோட்டமே அட்டகாசமாக இருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்கும் என்று என் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் 

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் வரை நடைபெறும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை முடித்து தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


 

From around the web