எஸ்பிபிக்காக இணையும் கமல், ரஜினி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்: புதிய தகவல்!

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் பிரார்த்தனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது எஸ்பிபி உடல்நிலை சீராக இருந்தாலும் தற்போது வென்டிலேட்டரில்தான் அவர் இருப்பதாக நேற்று எஸ்பிபி சரண் அவர்கள் வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்காக ஒரு கூட்டுப் பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற
 

எஸ்பிபிக்காக இணையும் கமல், ரஜினி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்: புதிய தகவல்!

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் பிரார்த்தனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

எஸ்பிபி உடல்நிலை சீராக இருந்தாலும் தற்போது வென்டிலேட்டரில்தான் அவர் இருப்பதாக நேற்று எஸ்பிபி சரண் அவர்கள் வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்காக ஒரு கூட்டுப் பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டுப் பிரார்த்தனையில் ரஜினிகாந்த், கமலஹாசன், ஏஆர் ரஹ்மான், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து உள்பட பலர் அவரவர் இருப்பிடத்தில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர்

இந்த கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எஸ்பிபி அவர்களின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இந்த கூட்டுப் பிரார்த்தனையின் பலனாக அவர் விரைவில் எழுந்து வருவார் என்று நம்பப்படுகிறது

From around the web