திடீரென ஆறு மாதங்கள் தள்ளி போகும் ரூ.200 கோடி பட்ஜெட் படம்: என்ன காரணம்?

ரூபாய் 200 கோடியில் தயாராகி வரும் ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் ஒரே ஒரு நடிகரால் ஆறு மாதங்கள் தள்ளிப் போகும் ஆபத்து இருப்பதாக படக்குழுவினர் அச்சம் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ’கே.ஜி.எஃப்’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வந்தது. ரூ.200 கோடியில் தயாராகி வரும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் 15 நாட்கள் படப்பிடிப்பு
 

திடீரென ஆறு மாதங்கள் தள்ளி போகும் ரூ.200 கோடி பட்ஜெட் படம்: என்ன காரணம்?

ரூபாய் 200 கோடியில் தயாராகி வரும் ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் ஒரே ஒரு நடிகரால் ஆறு மாதங்கள் தள்ளிப் போகும் ஆபத்து இருப்பதாக படக்குழுவினர் அச்சம் தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ’கே.ஜி.எஃப்’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வந்தது. ரூ.200 கோடியில் தயாராகி வரும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் 15 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த 15 நாட்களிலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த சஞ்சய்தத் நடிக்க வேண்டிய காட்சிகள் உள்ளது. ஆனால் அவர் தற்போது உடல் நலமில்லாமல் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அமெரிக்காவில் 45 நாட்கள் சிகிச்சை பெற உள்ளதாகவும் அதன் பின்னர் மீண்டும் மும்பை வந்து மூன்று மாதம் முழு ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

எனவே சஞ்சய்தத் குறித்த காட்சிகளை படமாக்க இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது ஏற்கனவே 200 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் சஞ்சய்தத் என்ற ஒரே ஒருவரால் ஆறு மாத காலம் காலதாமதம் ஆகலாம் என்ற தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

From around the web