பிக்பாஸ் சோம் சேகர் வீட்டில் விசேஷம்... உங்களுக்கு எப்போ?

இதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவிற்கு பயணம் செய்துள்ளார். Freeze டாஸ்க்கில் அவரது சகோதரரை நாம் அனைவரும் பார்த்தோம். மேலும் வேஷ்டி சட்டையில் தனது நண்பருடன் அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் "உங்களுக்கு எப்பொழுது திருமணம் சீக்கிரமே நல்ல செய்தி கூறுங்கள்" என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சிறந்த மனிதராக பலரது இதயங்களை பிடித்திருப்பவர் சோம். 

அவரது வளர்க்கும் செல்ல நாய் குட்டு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். காரணம்  அவர் பல இடங்களில் குட்டு வை பற்றி பேசியிருக்கிறார். கடிதம் எழுதச் சொன்னபோது கூட அவர் குட்டுவுக்கு தான் கடிதம் எழுதினார். இப்படி இளகிய மனம் படைத்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோம் எப்பொழுது லைனில் வருவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தனர் அப்பொழுது அதற்கு பதிலளித்த நான் உங்களை விரைவில் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஆனால் ஒரு முக்கியமான வேலையாக கேரளா குருவாயூர் வரைக்கும் செல்ல வேண்டி இருக்கிறது அதன் பிறகு உங்களை நிச்சயம் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. இந்நிலையில் சோம்மின் விட்டில் தற்பொழுது ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. 

ஆம் அவரது தம்பி லத்தீஸுக்கு  கேரளாவில் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவிற்கு பயணம் செய்துள்ளார். Freeze டாஸ்க்கில் அவரது சகோதரரை நாம் அனைவரும் பார்த்தோம். மேலும் வேஷ்டி சட்டையில் தனது நண்பருடன் அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் "உங்களுக்கு எப்பொழுது திருமணம் சீக்கிரமே நல்ல செய்தி கூறுங்கள்" என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web