பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட டேனி? வீடியோ ஆதாரம்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான டேனியல் ஆனி போப் இளம் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. அந்த பெண் பேசிய ஆடியோவை ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
 
பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட டேனி? வீடியோ ஆதாரம்!!!

படங்களில் நடித்து வந்தாலும் டேனியல் ஆனி போப்புக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் பெயரும், புகழும் கிடைத்தது. இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் சிறுமிகளை டார்கெட் செய்து நள்ளிரவில் புகைப்படம் எல்லாம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் டேனி செய்தவை என்று கூறி ஒருவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமானவர்களிடம் எல்லாம் இந்த டேனியல் ஆனி போப் ரொம்ப கேவலமா, அசிங்கமா உட்கார்ந்து பெண்களை ஹராஸ் செய்திருக்கிறார். டேனியுடன் வேலை செய்பவர்கள் கூட புகார் தெரிவித்துள்ளனர். அவர் சிறுமிகளை தான் குறி வைக்கிறார்.

பலருக்கு மெசேஜ் அனுப்பி வலை விரித்திருக்கிறார். ஒரு சில மெசேஜுகளை பார்க்கும் போது பயமாக இருக்கிறது. டேனியை பற்றி எனக்கு எல்லாம் தெரியும். என் ப்ரொஃபலை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று டேனியால் சொல்ல முடியாது. டேனியை பற்றி தைரியமாக தெரிவித்த பிட்ச்பரோட்டாவுக்கு(@bitchparotta)நன்றி. பிட்ச்பரோட்டா ஆடியோ போட்டாங்க, நான் வீடியோவே போடுகிறேன்.

2014ம் ஆண்டில் இருந்தே டேனி இப்படித் தான். யாருனே தெரியாத பெண்ணுக்கு ப்ரீமியர் ஷோவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் டேனி. ஒரு பெண்ணை டின்டரில் பார்த்துவிட்டு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

டேனி இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் ரொம்ப நாளாக கடலை போட்டு, சென்னைக்கு வந்தால் என்னை பாரு என்று சொல்லியிருக்கிறார். அப்படி பல பெண்கள் அவரை பார்த்திருக்கிறார்கள். அந்த பெண்கள் எல்லாம் தங்களுக்கு நடந்ததை என்னிடம் தெரிவித்துள்ளனர். எனக்கு வந்த ஆதாரங்கள் பல டேனிக்கு திருமணம் நடந்த பிறகு நடந்தது.

ஒரு பெண் சென்னைக்கு வந்தபோது டேனி கட்டாயப்படுத்தி அவர் இருக்கும் அறைக்கு வந்துவிட்டார். சாதாரணமாக பேச்சை துவங்கிய டேனி அவரை தொட்டிருக்கிறார். அந்த பெண் டேனியிடம் இருந்து தப்பிக்க அறைக்குள் ஓடியிருக்கிறது. (அந்த பெண் தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்த ஆடியோவை வெளியிட்டுள்ளார்).

மேலும் டேனி சில பெண்களுக்கு அனுப்பிய மெசேஜுகளை வெளியிட்டுள்ளார் அந்த நபர். அவரின் வீடியோவை பார்த்த பாடகி சின்மயி அது குறித்து ட்வீட் செய்திருக்கிறார்.

From around the web