சூப்பர் ஸ்டார் நடிகரை பார்க்க 200 கிமீ நடந்து சென்ற ரசிகர்!

 

சினிமா நடிகர் நடிகைகளை நேரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் பல்வேறு ரிஸ்க் எடுத்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்திலும் கூட சினிமா நடிகர் நடிகைகளை பார்ப்பதற்காக வெளியூரில் இருந்து சென்னை வரும் கூட்டம் இருந்துதான் வருகிறது

அதே போல தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் சினிமா நடிகர்களுக்கு மிகப் பெரிய மவுசு உள்ளது என்பதும் அங்கும் நடிகர்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் 200 கிலோமீட்டர் நடந்து வந்துள்ளார். அவரது சொந்த ஊரான மச்சேர்லா என்ற பகுதியிலிருந்து ஐதராபாத்திற்கு அவர் நடந்து சென்றுள்ளார் என்பதும் அவரது சொந்த ஊரில் இருந்து ஹைதராபாத் 200 கிலோ மீட்டரில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

தன்னைப் பார்ப்பதற்காக 200 கிலோ மீட்டர் நடந்து வந்த ரசிகரை தனது வீட்டிற்கு அழைத்து ஒருசில நிமிடங்கள் பேசிய அல்லு அர்ஜுன் அதன் பின்னர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அந்த ரசிகருக்கு தனது சார்பில் நினைவுப் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

From around the web