ஏரியில் மீன் பிடித்த விவகாரம்: நடிகர்கள் விமல் சூரி கைதா?

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீன் பிடித்த விவகாரத்தில் விமல், சூரி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஏரியில் விமல், சூரி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்று மீன் பிடித்து அதுகுறித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்தனர் மேலும் இதுகுறித்த விசாரணையில் உள்ளூர் பிரமுகர் ஒருவரின் காரில் அவர்கள் கொடைக்கானல் சென்று
 
ஏரியில் மீன் பிடித்த விவகாரம்: நடிகர்கள் விமல் சூரி கைதா?

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீன் பிடித்த விவகாரத்தில் விமல், சூரி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஏரியில் விமல், சூரி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்று மீன் பிடித்து அதுகுறித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்தனர்

மேலும் இதுகுறித்த விசாரணையில் உள்ளூர் பிரமுகர் ஒருவரின் காரில் அவர்கள் கொடைக்கானல் சென்று வந்ததாகவும் தெரிய வந்தது

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் 3 வனத் துறை அலுவலர்களை சஸ்பெண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரியில் சென்று மீன் பிடித்ததாக விமல், சூரி ஆகிய இருவர் மீதும் இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்படுவார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web