ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் இசையில் உருவான '99 ஸாங்ஸ்' படம்!..

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி இசையமைத்துள்ள 99 ஸாங்ஸ் மியூசிக்கல் ரொம்பாண்டிக் திரைப்படம்  தொடர்பான மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது.

 
ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் இசையில் உருவான '99 ஸாங்ஸ்' படம்!..

 2021, ஏப்ரல் 16-ஆம் தேதி இந்த படம் வெளியாகவிருப்பதாக ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இஹான் பாத் மற்றும் எடில்ஸி வர்காஸ் நடிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு ரஹ்மானே கதை எழுதியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் இசையமைக்க, விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ளார்.  இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், “99 ஸாங்ஸ் .. 16 April , 2021 அன்று தமிழில் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன்  பகிர்கிறேன்!” என பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இந்த படம் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் வெளியாகிறது.


 

From around the web