இன்று ஒரே நாளில் 99 பேர் மரணம்: அதிகரிக்கும் கொரோனா பலியால் பரபரப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 5879 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 251738 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 56738 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது சென்னையில் இன்று மட்டும் 1074 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 100877 ஆக உயர்ந்துள்ளது என்றும், சென்னையில் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 

இன்று ஒரே நாளில் 99 பேர் மரணம்: அதிகரிக்கும் கொரோனா பலியால் பரபரப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 5879 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 251738 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 56738 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சென்னையில் இன்று மட்டும் 1074 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 100877 ஆக உயர்ந்துள்ளது என்றும், சென்னையில் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் இதனால் பலி எண்ணிக்கை 4,034 ஆக அதிகரிப்பு என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 7,010 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 லிருந்து 1,90,966 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் இன்று கொரொனா பரிசோதனை 58,243 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து மொத்தம் 26,18,512 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று ஒரே நாளில் 99 பேர் மரணம்: அதிகரிக்கும் கொரோனா பலியால் பரபரப்பு

From around the web