’96’ படத்தின் இரண்டாவது கிளைமாக்ஸ் இதுதான்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படத்தின் கிளைமாக்ஸில் ராம், ஜானு ஆகிய இரண்டு கேரக்டர்களும் பிரியும்போது கட்டிப்படித்து தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அப்படி ஒரு காட்சியை படத்தில் வைக்காமல் இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக பலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் 100வது நாள் விழாவை ரசிகர்கள் விரும்பிய இந்த காட்சியில் தோன்றும்படி விஜய்சேதுபதி, த்ரிஷாவை நடிகர் பார்த்திபன் கேட்டுக்கொண்டார். அவருடைய வேண்டுகோளை ஏற்ற விஜய்சேதுபதியும் த்ரிஷாவும்
 


’96’ படத்தின் இரண்டாவது கிளைமாக்ஸ் இதுதான்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படத்தின் கிளைமாக்ஸில் ராம், ஜானு ஆகிய இரண்டு கேரக்டர்களும் பிரியும்போது கட்டிப்படித்து தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அப்படி ஒரு காட்சியை படத்தில் வைக்காமல் இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக பலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் 100வது நாள் விழாவை ரசிகர்கள் விரும்பிய இந்த காட்சியில் தோன்றும்படி விஜய்சேதுபதி, த்ரிஷாவை நடிகர் பார்த்திபன் கேட்டுக்கொண்டார். அவருடைய வேண்டுகோளை ஏற்ற விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் மேடைக்கு வந்து கட்டிப்பிடித்தனர். ‘இதுதான் 96 படத்தின் இரண்டாவது கிளைமாக்ஸ்’ என்று விஜய்சேதுபதி கூற அரங்கமே கைதட்டியது.

இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் தயாரிக்கப்படவுள்ள நிலையில் இந்த காட்சியை கிளைமாக்ஸில் இயக்குனர் பிரேம்குமார் வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web