அப்பாடா ஒரு வழியா ரிலீஸ்க்கு வந்துட்டு போ!

நடிகர் ரன்வீர் சிங் நடித்த "83" திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது!
 
ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள "83" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தகவல்!

 "பாஜிராவ் மஸ்தானி" போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் பிரபல இந்திய நடிகர் "ரன்வீர் சிங்". தற்போது தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "83" .இத்திரைப்படம் இந்திய கிரிக்கெட் அணியை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங் முன்னாள் இந்திய அணியின் வீரரான "கபில்தேவ்" கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

83

இத்திரைப்படம் ஒரு வழியாக ஜூன் மாதம் நாலாம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இத்திரைப்படத்தில் இவருடன் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகை" தீபிகா படுகோனே" நடித்துள்ளார். தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான "சென்னை எக்ஸ்பிரஸ்" என்ற திரைப்படம் வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்அடித்தது.

தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள 83 திரைப்படமானது ஜூன் மாதம் நாலாம் தேதி வெளியாகும் தகவல் வெளியானது.  இந்திய சினிமாவின் ரசிகர்களும் கிரிக்கெட் ரசிகர்களும்  ஆனந்தத்தில் உள்ளனர்.

From around the web