80 வயது கிழவி வில்லியாக மிரட்டும் தமிழ்ப்படம்!

ஆபாவாணன் இயக்கிய ஊமைவிழிகள் என்ற படத்தில் 80 வயது கிழவி ஒருவர் வில்லி வேடத்தில் நடித்திருப்பார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் படம் முழுவதும் 80 வயது கிழவி ஒருவர் வில்லியாக நடிக்கும் தமிழ் படம் ஒன்று தற்போது தயாராகி வருகிறது ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா என்ற இயக்குனர் தற்போது இயக்கிவரும் திரைப்படத்தில் பிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வெப்சீரிஸில் நடித்து வரும் பிரபல
 
80 வயது கிழவி வில்லியாக மிரட்டும் தமிழ்ப்படம்!

ஆபாவாணன் இயக்கிய ஊமைவிழிகள் என்ற படத்தில் 80 வயது கிழவி ஒருவர் வில்லி வேடத்தில் நடித்திருப்பார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் படம் முழுவதும் 80 வயது கிழவி ஒருவர் வில்லியாக நடிக்கும் தமிழ் படம் ஒன்று தற்போது தயாராகி வருகிறது

ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா என்ற இயக்குனர் தற்போது இயக்கிவரும் திரைப்படத்தில் பிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வெப்சீரிஸில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் பெரிய திரையில் அறிமுகமாக உள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ரேஷ்மாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்

இந்த படத்தில் மாயாக்கா என்ற 80 வயது கிழவி ஒருவர் வில்லி வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் இவருடைய வில்லத்தனம் தான் இந்த படத்தின் ஹைலைட் என்றும் கூறப்படுகிறது. ஹீரோவாக நடிக்கும் பிரேம்ஜியே மாயாக்காவின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டதாகவும் இவர் பல படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்து வந்த போதிலும் இந்த படத்தில் இவர் படம் முழுவதும் வரும் வில்லியாக நடித்து கலக்கி இருக்கிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

முழுக்க முழுக்க கிராமிய கிராமத்தில் படமாக்கப்படும் இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web