இளையராஜா இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் – பாகம் 8

இளையராஜாவின் இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் என்ற தலைப்பில் இதுவரை 7 பாகங்களை கூறியுள்ளோம். இன்று எட்டாவது பாகத்தில் தொடர்கிறோம். இசைக்கு மொழியில்லை என்பதற்கேற்பத்தான் இளையராஜாவின் பாடல்கள் பல விளங்குகின்றன. எந்த அளவு தமிழ் பாடல்களை கேட்டு ரசிக்கிறோமோ அதே அளவு கொஞ்சம் கூட குறையாமல் தமிழக ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் அளவு தெலுங்கு பாடல்களை இளையராஜா இசைத்தார். அந்த வகையில் 1988ல் வெளிவந்த மகரிஷி என்ற தெலுங்கு பட பாடல்களை பற்றி பார்க்க
 

இளையராஜாவின் இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் என்ற தலைப்பில் இதுவரை 7 பாகங்களை கூறியுள்ளோம். இன்று எட்டாவது பாகத்தில் தொடர்கிறோம்.

இசைக்கு மொழியில்லை என்பதற்கேற்பத்தான் இளையராஜாவின் பாடல்கள் பல விளங்குகின்றன. எந்த அளவு தமிழ் பாடல்களை கேட்டு ரசிக்கிறோமோ அதே அளவு கொஞ்சம் கூட குறையாமல் தமிழக ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் அளவு தெலுங்கு பாடல்களை இளையராஜா இசைத்தார்.

இளையராஜா இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் – பாகம் 8

அந்த வகையில் 1988ல் வெளிவந்த மகரிஷி என்ற தெலுங்கு பட பாடல்களை பற்றி பார்க்க இருக்கிறோம். மகரிஷி ராகவா, நிஷாந்தி நடித்திருந்த இப்படம் அருமையான ஆழமான காதல் கதையாகும்.

அருமையான மியூசிக்கல் ஹிட் ஆக இப்படம் விளங்கியது. தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிந்தால் அந்த படம் உறுதியாக ஹிட் என்ற வகையில் இருக்கும் அது போல தெலுங்கில் இளையராஜா வம்சி கூட்டணி சேர்ந்தால் பாடல்கள் ஹிட் என்ற வகையில் இருந்தது.

அதுபோலவே மகரிசி படத்தில் இணைந்த இந்த கூட்டணியால் பாடல்கள், பின்னணி இசை எட்டு திக்கும் கொட்டு முழக்கமாக முழங்கியது.

மஞ்சப்பொடி தேய்க்கையிலே என்ற தமிழ்ப்பாடல் இந்த படத்தில் மாட ராணி மவுன மிடியாக மாறியது. அது போலவே எஸ்.பி.பி பாடிய சுமம் ப்ரதி சுமம் சுமம் பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

From around the web