இசைஞானியின் 77வது பிறந்த நாள் குவியும் வாழ்த்து

44 வருடங்களாக தமிழர்கள் மனதை கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா அவர்கள். இவர்கள் செய்யாத இசை சாதனையே கிடையாது. தேனி மாவட்டம் பண்ணைபுரத்திலிருந்து சென்னை சென்று அரிதான பல மெட்டுக்களை நமக்கு தந்து நம்மை மகிழ வைத்தவர் இன்றும் மகிழ வைத்து கொண்டிருப்பவர் இவர். 80களில் மாதம் தோறும் இவர் இசையமைத்த படங்களே அதிகம் வரும். கோல்டன் பீரியட்ஸ் என சொல்லப்படும் சினிமாவுலகின் பொற்காலத்தை இவர் இசையமைத்த படங்களின் பாடல்களே அப்படி சொல்ல வைக்கிறது. 1000 படங்களை இசைத்து
 

44 வருடங்களாக தமிழர்கள் மனதை கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா அவர்கள். இவர்கள் செய்யாத இசை சாதனையே கிடையாது.

இசைஞானியின் 77வது பிறந்த நாள் குவியும் வாழ்த்து

தேனி மாவட்டம் பண்ணைபுரத்திலிருந்து சென்னை சென்று அரிதான பல மெட்டுக்களை நமக்கு தந்து நம்மை மகிழ வைத்தவர் இன்றும் மகிழ வைத்து கொண்டிருப்பவர் இவர்.

80களில் மாதம் தோறும் இவர் இசையமைத்த படங்களே அதிகம் வரும். கோல்டன் பீரியட்ஸ் என சொல்லப்படும் சினிமாவுலகின் பொற்காலத்தை இவர் இசையமைத்த படங்களின் பாடல்களே அப்படி சொல்ல வைக்கிறது.

1000 படங்களை இசைத்து இன்று இசைச்சிகரமாய் யாரும் தொட முடியாத அளவில் வீற்றிருக்கும் இசைஞானியின் சாதனைகளை சொல்ல வார்த்தைகளே இல்லை.

இன்றும் இரவு நேர மொட்டை மாடி நிலாவை பார்த்துக்கொண்டே இளையராஜாவின் சோகப்பாடல்களை கேட்டால் காயம்பட்ட நம் மனதுக்கு மருந்திடுவது போல் இருக்கும்.

அதிகாலை கடை திறக்கும் டீக்கடைக்காரர் முதலில் ஒரு பக்திப்பாடலை ஒலிபரப்பிவிட்டு பின்பு நான்ஸ்டாப்பாக இளையராஜா பாடல்களை போட்டுத்தான் டீ ஆற்றுவார். ஆட்டோக்காரர், மினிபஸ், பஸ், எஃப் எம்கள் என எங்கும் இளையராஜாதான். காலையில் இருந்து இரவு வரை எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இளையராஜாவின் பாடல்கள்தான்.

1000 படங்கள் இசைத்தவர். இளையராஜாவின் பாடல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அவரின் பின்னணி இசைக்காக ஓடிய படங்கள் அதிகம். ரஜினிக்கு மாஸ் கொடுத்து அவரை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்த்தியது இளையராஜாவின் பின்னணி இசைதான்.

இன்று 77வது பிறந்த நாளை கொண்டாடும் இசைஞானிக்கு இளையராஜாவின் இசைவெறியர்கள் என சொல்லும் பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டுவிட்டர், ஃபேஸ்புக்கில் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

From around the web