இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்த நாள் இன்று

இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் . உலகத்தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி என்றாலும் இளையராஜா பாடல்கள்தான், ஏதாவது பிரச்சினைகள் சோகங்கள் துரத்தினாலும் இளையராஜாவின் பாடல்களே அவர்கள் கேட்டு இளைப்பாற்றிக்கொள்ளும் மருந்தாக இருக்கிறது. இளையராஜாவின் பாடல்கள் மனதில் மையல் கொண்டு அதன் மீது தீராத காதல் கொண்டு எந்த நேரமும் இளையராஜாவின் பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கும் ரசனைக்காரர்கள் தமிழ்நாட்டில் அதிகம். அவரின் ஒரு படம் விடாமல் கலெக்சன் செய்வதும், அவரின் இசைத்தட்டுகளை கலெக்சன் செய்வதும் அவரின் ஆராய்ச்சி பற்றி ஆய்வு
 

இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் . உலகத்தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி என்றாலும் இளையராஜா பாடல்கள்தான், ஏதாவது பிரச்சினைகள் சோகங்கள் துரத்தினாலும் இளையராஜாவின் பாடல்களே அவர்கள் கேட்டு இளைப்பாற்றிக்கொள்ளும் மருந்தாக இருக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்த நாள் இன்று

இளையராஜாவின் பாடல்கள் மனதில் மையல் கொண்டு அதன் மீது தீராத காதல் கொண்டு எந்த நேரமும் இளையராஜாவின் பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கும் ரசனைக்காரர்கள் தமிழ்நாட்டில் அதிகம்.

அவரின் ஒரு படம் விடாமல் கலெக்சன் செய்வதும், அவரின் இசைத்தட்டுகளை கலெக்சன் செய்வதும் அவரின் ஆராய்ச்சி பற்றி ஆய்வு செய்து பி ஹெச் டி வாங்கும் நபர்கள் வரை தமிழ்நாட்டில் அதிகம் பேர் உள்ளனர்.

பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்கள் இளையராஜாவின் பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து பி ஹெச்டி வாங்கியவர்.

கடும் சோகத்தில் இருப்போர் இளையராஜாவின் சோகப்பாடல்கள் சிலவற்றை தனிமையில் அமர்ந்து சில நிமிடம் கேட்டாலே அவர்கள் மனம் வசப்படும் என்பது உண்மை.

அதே போல் கடும் கொண்டாட்ட மனநிலைகளில் உள்ளவர்களும் , நீண்ட தூரம் பயணம் செய்பவர்களும், டீக்கடைக்காரர்களும் ஹோட்டல்களும், சலூன்கடைகளும், பண்பலைகளும், கார், பஸ், லாரி டிரைவர்களும் இளையராஜா இல்லாமல் இயங்குவதில்லை.

இரவு நடுநிசியில் எங்காவது பேருந்து தேடி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தாலும் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே என்று யாராவது பேருந்து ஓட்டுநர் ஒலிபரப்ப உங்களை காற்றில் கலக்க வைக்கும், அதிகாலையில் எழுந்து அவசரமாக பேருந்து நிலையம் சென்றாலும் எங்காவது டீக்கடைகளில் புத்தம் புதுக்காலை என்று காற்றில் கலந்து வந்து உங்களை ரம்மியமாக தழுவி காலைப்பொழுதை இனிமையாக்கும்

எத்தனையோ பாடல்கள் புதிது புதிதாக அறிமுகமானாலும் இவ்வுலகம் அழிந்து புது உலகம் தோன்றினாலும் இளையராஜாவின் பாடல்கள் என்றும் அழியாத வல்லமை கொண்டது.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

From around the web