இளையராஜா 75 நியூ அப்டேட்ஸ்

அன்னக்கிளி படத்தில் இருந்து இசையமைத்து இன்று ஆயிரம் படங்களை தொட்டிருக்கிறார் இளையராஜா. அவரின் இசை சாதனையை கெளரவிக்கும் வகையில் மிகப்பெரிய விழாக்கள் எதுவும் தமிழ் சினிமா உலகம் நடத்தியதில்லை. முப்பது வருடங்கள் முன்பு பழ கருப்பையா ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் காரைக்குடியில் வைத்து இசைஞானி என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார். பின்பு விஜய் டிவி ஒரு சின்ன ப்ரோகிராம் ஒன்றை இவருக்காக நடத்தியது. அதன் பின் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் இளையராஜா 75
 

அன்னக்கிளி படத்தில் இருந்து இசையமைத்து இன்று ஆயிரம் படங்களை தொட்டிருக்கிறார் இளையராஜா. அவரின் இசை சாதனையை கெளரவிக்கும் வகையில் மிகப்பெரிய விழாக்கள் எதுவும் தமிழ் சினிமா உலகம் நடத்தியதில்லை.

இளையராஜா 75 நியூ அப்டேட்ஸ்

முப்பது வருடங்கள் முன்பு பழ கருப்பையா ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் காரைக்குடியில் வைத்து இசைஞானி என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார்.

பின்பு விஜய் டிவி ஒரு சின்ன ப்ரோகிராம் ஒன்றை இவருக்காக நடத்தியது.

அதன் பின் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் இளையராஜா 75 விழாவை நடத்துகிறது. இருந்தாலும் ஒரு தரப்பு இதற்கு எதிராக உள்ளது.

இந்த நிலையில் சென்னை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற விழாவில்
இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கலியுக கர்ணன் என்ற விருதை அபிராமி ராமநாதனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார். விழாவில் பேசிய அவர், தான் மனதை மட்டுமே பார்ப்பவன் என்றும் வெளி சமாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் இளையராஜா கூறினார்.

என் நிகழ்ச்சிக்காக பயிற்சிகள் நடந்து வருகிறது என குறிப்பிட்டார். 

From around the web