இளையராஜா 75 பார்த்திபன் கவிதை வாழ்த்து

நடிகர் பார்த்திபன் இசைஞானி இளையராஜாவுடன் இணக்கமானவர். பாக்யராஜின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றும்போதே இசைஞானியை நன்கு அறிந்தவர். இருப்பினும் பார்த்திபனின் முதல் படமான புதிய பாதையில் இளையராஜா இசையமைக்கும் வாய்ப்பு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அமையவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த தனது படங்களிலும் தான் நடிக்கும் படங்களிலும் இளையராஜாவை இசையமைக்க வைத்து பெருமை சேர்த்தார். இவரின் பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உன்னை வாழ்த்தி பாடுகிறேன், உள்ளே வெளியே,இவன் போன்ற படங்களுக்கு இசை இளையராஜாதான். அது போல் இவர் நடிப்பிலும்
 

நடிகர் பார்த்திபன் இசைஞானி இளையராஜாவுடன் இணக்கமானவர். பாக்யராஜின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றும்போதே இசைஞானியை நன்கு அறிந்தவர்.

இளையராஜா 75 பார்த்திபன் கவிதை வாழ்த்து

இருப்பினும் பார்த்திபனின் முதல் படமான புதிய பாதையில் இளையராஜா இசையமைக்கும் வாய்ப்பு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அமையவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த தனது படங்களிலும் தான் நடிக்கும் படங்களிலும் இளையராஜாவை இசையமைக்க வைத்து பெருமை சேர்த்தார்.

இவரின் பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உன்னை வாழ்த்தி பாடுகிறேன், உள்ளே வெளியே,இவன் போன்ற படங்களுக்கு இசை இளையராஜாதான்.

அது போல் இவர் நடிப்பிலும் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்திலும் வந்த தாலாட்டு பாடவா படத்திலும் இளையராஜா இசைதான். எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்.

இவர்கள் கூட்டணியில் இளையராஜாவின் ஆஸ்தான் புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி பாடிய பல பாடல்கள் பார்த்திபனுக்கு பொருந்தி வந்தது.

ஆராரோ பாட்டுப்பாட,வராது வந்த நாயகன்,நீதானா நீதானா,ஓடைக்குயில் ஒரு பாட்டு படிக்கலையா, போன்ற பாடல்கள் பார்த்திபன், இளையராஜா, அருண்மொழி காம்பினேஷனில் வந்த சிறந்த பாடல்கள் ஆகும்.

இந்நிலையில் இளையராஜா 75 நிகழ்ச்சியை ஒட்டி பார்த்திபன் ஒரு டிவிட் செய்துள்ளார்.

இரு தினங்களுக்கு …. இளையராஜா இசை கேட்டபடி திசைத்தெரியாப் பயணம் -காரில்! இசைக் கடலை இசைப் புயல் வாழ்த்தும் நாளைய நிகழ்வு -நீண்ட நாளைய கனவு, கண்கொள்ளா காட்சி!

From around the web