இளையராஜா 75 சிறப்பு பதிவு

இளையராஜா இசை கேட்காத நபர்கள் தமிழ் நாட்டில் அரிதாகவே பார்க்க முடியும் இன்று பிறந்த குழந்தைக்கு கூட இளையராஜாவின் இசை ஸ்பரிசத்தை நுகராமல் இருக்க மாட்டார்கள். ஜாதி, மதம், இனம், மொழி கடந்து இளையராஜாவின் இசை அனைவரையும் வசீகரிக்கிறது. கடவுள் நம்பிக்கையுள்ளவன், நம்பிக்கை இல்லாதவன், என எல்லாரையும் வசீகரிக்கும் இசையாக உள்ளது. இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டவர்களையே தடை கொடுக்க முடியாது என நீதிபதிகளை சொல்ல வைக்கிறது இளையராஜாவின் இசை. இளையராஜாவின் இசையில் பெரும்பாலான ரசிகர்களும்
 

இளையராஜா இசை கேட்காத நபர்கள் தமிழ் நாட்டில் அரிதாகவே பார்க்க முடியும் இன்று பிறந்த குழந்தைக்கு கூட இளையராஜாவின் இசை ஸ்பரிசத்தை நுகராமல் இருக்க மாட்டார்கள்.

இளையராஜா 75 சிறப்பு பதிவு

ஜாதி, மதம், இனம், மொழி கடந்து இளையராஜாவின் இசை அனைவரையும் வசீகரிக்கிறது. கடவுள் நம்பிக்கையுள்ளவன், நம்பிக்கை இல்லாதவன், என எல்லாரையும் வசீகரிக்கும் இசையாக உள்ளது.

இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டவர்களையே தடை கொடுக்க முடியாது என நீதிபதிகளை சொல்ல வைக்கிறது இளையராஜாவின் இசை.

இளையராஜாவின் இசையில் பெரும்பாலான ரசிகர்களும் இன்றைய இளையதலைமுறையினரும் கேட்டது மிக மிக குறைவாகவே இருக்கும்.

அவரின் அரிதான அற்புதமான துள்ளாட்டம் போடவைத்த நம்மை மெஸ்மரிசம் செய்த பாடல்கள் அவர் இசையமைத்து படத்தின் கதையால் படம் தோல்விப்படமாக அத்தோடு அது போய்விடுகிறது.

பெரும்பாலும், முதல் மரியாதை, உதயகீதம், இதயக்கோவில்,அவதாரம், மெளனராகம், மூன்றாம் பிறை டைப் பாடல்களே வெகுஜன ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகின்றன. ஆனால் அவர் அதையும் தாண்டி அற்புத இசையை படைத்தவர்.

அவரது பாடல்கள் கேட்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவரது பின்னணி இசை வேற லெவல் என்றே சொல்லலாம். அவரது படங்களின் பின்னணி இசையை இந்த படத்தில்தான் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. அவர் இசையமைத்த அன்னக்கிளி தொடங்கி தாரை தப்பட்டை வரை எந்த படத்திலும் பின்னணி இசைக்கு குறைவே இருக்காது.

பின்னணி இசைக்காகவே ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் வைண்ட் ஆல்பங்கள் அந்நாட்களில் ரசிகர்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்ட ஆல்பங்களாகும்.

இளையராஜா இசையமைத்த பிள்ளை நிலா படத்தின் பின்னணி இசை முதன் முதலாக தனி தொகுப்பாக வந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மிஷ்கின் கூட தனது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பின்னணி இசை என்று குறிப்பிடாமல் முன்னணி இசை என்று குறிப்பிட்டு இளையராஜாவுக்கு பெருமை சேர்த்தார்.

பின்னணி இசையில் முன்னணியாக செயல்பட்டவர் உலக அளவில் இளையராஜாவாகவே மட்டுமே இருக்க முடியும். வேறு யாரும் இவ்வளவு அற்புதமான பின்னணி இசையை கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமான விசயமே.

From around the web