அர்ச்சனா, ஆரி உள்பட 7 பேர் நாமினேஷன்: வெளியேறுவது யார்?

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் செய்யப்படும் நிகழ்வு நடைபெறும் நிலையில் நேற்று நடந்த நாமினேஷன் படலத்தில் அர்ச்சனா, ஆரி உள்பட 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் 

அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி, சோம் சேகர், சுரேஷ் மற்றும் அனிதா ஆகிய ஏழு பேர்களை சக போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் வரும் ஞாயிறு அன்று வெளியேற்றப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அர்ச்சனாவின் குரூப்பில் உள்ள அனைவரும் ஆரியை நாமினேட் செய்ததால் ஆரிக்கு ஓட்டுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக ஆரி ஆவேசமாக விளையாடி வருகிறார் என்பதும் அவரை அர்ச்சனா குரூப் கார்னர் செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது

இதனையடுத்து அவரை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவோடு அர்ச்சனா குரூப் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆரிக்கும் ஒரு குரூப் இருப்பதாகவும், அர்ச்சனாவை வெளியேற்ற அவரை அவர்கள் நாமினேட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் பாலாஜி மற்றும் சனம் ஆகிய இருவரும் மாறி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதால் அவர்கள் இருவரையும் ஒரு சிலர் நாமினேட் செய்துள்ளனர். நாமினேஷனில் சிக்க கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்த அனிதா, இந்த வாரமும் நாமினேஷனில் சிக்கி உள்ளார் என்பதும் நாமினேஷனில் சிக்குவார்கள் என்று எதிர்பார்த்த ஆஜித் கேப்ரில்லா, ரியோ உள்ளிட்டோர் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web