7ஆம் தேதி ஆடியோ விழா, 12 ஆம் தேதி பிறந்த நாள், 15 ஆம் தேதி படப்பிடிப்பு: பிசியில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த வயதிலும் பிஸியாக இருப்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த மாதம் அவர் படு பிஸியாக இருக்க போகிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் ஆடியோ விழா வரும் 7ம் தேதி நடத்த திட்டமிட்டு அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 7ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற
 

7ஆம் தேதி ஆடியோ விழா, 12 ஆம் தேதி பிறந்த நாள், 15 ஆம் தேதி படப்பிடிப்பு: பிசியில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த வயதிலும் பிஸியாக இருப்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த மாதம் அவர் படு பிஸியாக இருக்க போகிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது

ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் ஆடியோ விழா வரும் 7ம் தேதி நடத்த திட்டமிட்டு அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 7ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது

இதனை அடுத்து டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அதன் பின்னர் டிசம்பர் 15ஆம் தேதி ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனால் இம்மாதம் முழுவதும் ரஜினிகாந்த் படுபிஸியாக இருக்கப் போகிறார் என்பது உறுதியாகிறது.

From around the web