இதுதானா விஜய் 63 கதை

விஜய் தற்போது தளபதி 63 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை இதுதான் என்ற வகையில் வெளியே அப்படத்தின் கதை கசிந்ததாக கூறப்படுகிறது. கால்பந்து விளையாட்டு வீரர்களாக இருக்கும் விஜய், கதிர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். உள்ளூர் போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெறுகின்றனர். பிறகு கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதிர் மர்மமாக கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் விஜய் கொலைகாரர்களை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார். அப்போது கொலைக்கு
 

விஜய் தற்போது தளபதி 63 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை இதுதான் என்ற வகையில் வெளியே அப்படத்தின் கதை கசிந்ததாக கூறப்படுகிறது.

இதுதானா விஜய் 63 கதை

கால்பந்து விளையாட்டு வீரர்களாக இருக்கும் விஜய், கதிர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். உள்ளூர் போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெறுகின்றனர். பிறகு கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதிர் மர்மமாக கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் விஜய் கொலைகாரர்களை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்.


அப்போது கொலைக்கு பின்னால் பயங்கர சதித்திட்டங்கள் இருப்பது தெரிகிறது. வில்லன்களுடன் மோதி அழிக்கிறார். பின்னர் கதிர் பயிற்சி அளித்த கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக மாறி எப்படி சாம்பியன் கோப்பையை வெல்ல வைக்கிறார் என்பது கதை என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஏற்கனவே விஜய்யின் கில்லி படமும் விளையாட்டை மையமாக வைத்து வந்தது. அதை விட விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.

From around the web