சினிமாவில் 60 வது வருடத்தை நெருங்கிய கமல்

கமல்ஹாசன் நடித்து கடந்த 1959ல் வந்த படம் களத்தூர் கண்ணம்மா. குட்டி சிறுவனாக சுட்டித்தனத்துடன் நடித்த கமல் இந்தப்படத்தால் புகழப்பட்டார். சிறுவயதிலேயே மிக புகழ்பெற்றார். அப்போது வந்த பார்த்தால் பசி தீரும், ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் சிவாஜி, எம்.ஜி.ஆர் உடன் எல்லாம் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஓரளவு லேசான பருவம் எட்டிப்பார்த்தபோது குறத்தி மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதற்கு பின் 70களில் பாலச்சந்தர், ருத்ரய்யா உள்ளிட்டோரின் படங்களில் நடித்து புகழ்பெற்றார். பின்பு பாரதிராஜாவின் 16வயதினிலே
 

கமல்ஹாசன் நடித்து கடந்த 1959ல் வந்த படம் களத்தூர் கண்ணம்மா. குட்டி சிறுவனாக சுட்டித்தனத்துடன் நடித்த கமல் இந்தப்படத்தால் புகழப்பட்டார். சிறுவயதிலேயே மிக புகழ்பெற்றார். அப்போது வந்த பார்த்தால் பசி தீரும், ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் சிவாஜி, எம்.ஜி.ஆர் உடன் எல்லாம் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

சினிமாவில் 60 வது வருடத்தை நெருங்கிய கமல்

ஓரளவு லேசான பருவம் எட்டிப்பார்த்தபோது குறத்தி மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதற்கு பின் 70களில் பாலச்சந்தர், ருத்ரய்யா உள்ளிட்டோரின் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

பின்பு பாரதிராஜாவின் 16வயதினிலே என நடித்து, மிக குறுகிய காலத்திலேயே 1980களின் ஆரம்பத்திலேயே ராஜபார்வை படத்தின் மூலம் 100வது படத்தை எட்டிப்பிடித்தார்.

தேவர் மகன், குணா, மகாநதி, தசாவதாரம் என பல மைல்கல்லான படங்களில் நடித்து தற்போது வரை புகழ்பெற்று விளங்குகிறார். மக்கள் நீதி மய்ய கட்சி தலைவராகவும் கட்சியை வழிநடத்தி செல்கிறார்.

சினிமாவில் ஒரு சாதனை இரு சாதனை அல்ல பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் இவர்.

இவர் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வந்தால் அத்தோடு இவர் திரைக்கு வந்து 60 வருடம் ஆகிவிட்டதாம். கடந்த 12.8.1959ல் இவர் நடித்த களத்தூர் கண்ணம்மா ரிலீஸ் ஆனது.

60 வருடம் ஒரு கலைஞர் சிறப்பான முறையில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருவது ஆச்சரியமான விசயமே .

From around the web