மாலை 6 மணி! "சிங்கிள் ட்ராக்"!

இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது !"லாபம் "படத்தின் சிங்கிள் ட்ராக்!
 
"மக்கள் செல்வன்" நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தின் "சிங்கிள் ட்ராக்"!

தனது கடின உழைப்பாலும், தனது திறமையாலும் இன்று மக்களிடையே "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படுபவர் "நடிகர் விஜய் சேதுபதி". ஆரம்ப காலங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். இவரின் நடிப்பில் வெளியாகிய "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்ற திரைப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டார்.மேலும் இவர் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவுடன் "நானும் ரவுடிதான்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்தது.

laabam

அதன் பின்னர் வெளியாகிய "சேதுபதி" என்ற திரைப்படம் இவருக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர "விக்ரம் வேதா" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது.சில நாட்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியாகி இன்றளவும் தியேட்டர்கள் கூட்டங்கள் நிறைந்துள்ள திரைப்படம் "மாஸ்டர்".இத்திரைப்படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு வில்லனாக தோன்றி மக்களை வெகுவாக கவர்ந்தார் .குறிப்பாக நடித்துள்ள "பவானி" என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு மதிப்பையும், வரவேற்பையும் பெற்றது.

தற்போது இவரின் நடிப்பில்உருவாக்குகின்ற திரைப்படம் "லாபம்". இத்திரைப்படத்தில் பிரபல நடிகை "சுருதிஹாசன்" இவருடன் இணைந்து நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் "இமான்" இசை அமைக்கிறார்.தற்போதைய திரைபடத்தின் "சிங்கிள் ட்ராக்" இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும் கொண்டாட்டத்திலும் உள்ளனர்.

From around the web