ஒரே நாளில் 6 மில்லியன் வியூஸா?

தனது நடிப்பாலும், தனது திறமையாலும் இன்று அசைக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் "நடிகர் தனுஷ்". தனுஷ் நடிப்பில் வெளியான "வேலையில்லா பட்டதாரி" என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை அமலாபால்" நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் "விவேக்" நடித்திருந்தார்.

மேலும் நடிகர் தனுஷ் "ஆடுகளம்"," பொல்லாதவன்" போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிப்பில் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "அசுரன்".மேலும் இவர் நடிப்பில் வெளியாகி நல்லதொரு வரவேற்பு பெற்று அதன் இரண்டாம் பாகம் எப்போது என கேட்கும் அளவிற்கு வெற்றியைக் கண்ட திரைப்படம் "வடசென்னை". வடசென்னை திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை "ஐஸ்வர்யா ராஜேஷ்" நடித்திருந்தார்.
தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ஜகமே தந்திரம்". "ஜகமே தந்திரம்" திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் நல்லதொரு வரவேற்பு பெற்று வைரலாக பரவியது. தற்போது 6 மில்லியன் வியூஸை கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனால் இவரது ரசிகர்களும், படக்குழுவினரும் ஆனந்தத்திலும் கொண்டாட்டத்திலும் உள்ளனர்.