‘விக்ரம் 58’ படத்திற்கு இந்த டைட்டிலா?

சீயான் விக்ரம் நடித்து வரும் 58வது படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது இந்த படத்திற்கு ‘கோப்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் ஜனவரி புத்தாண்டில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ். ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து
 
‘விக்ரம் 58’ படத்திற்கு இந்த டைட்டிலா?

சீயான் விக்ரம் நடித்து வரும் 58வது படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது

இந்த படத்திற்கு ‘கோப்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் ஜனவரி புத்தாண்டில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ். ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தை முடித்து விட்டு விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல விரும்பினால் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்புகள் மட்டும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web