பேட்ட’க்கு 500 தியேட்டர், விஸ்வாசத்துக்கு 100 தியேட்டர்

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும் நகரங்களில் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களுக்கு சம அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பி மற்றும் சி செண்டர்களில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படத்திற்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அமெரிக்காவில் பேட்ட திரைப்படம் 500 திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாகவும், விஸ்வாசம் படம் 100 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே முதல் நாள் வசூல் தமிழக அளவில் விஸ்வாசம் முதலிடத்தை பிடித்தாலும்,
 


பேட்ட’க்கு 500 தியேட்டர், விஸ்வாசத்துக்கு 100 தியேட்டர்

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும் நகரங்களில் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களுக்கு சம அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பி மற்றும் சி செண்டர்களில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படத்திற்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் அமெரிக்காவில் பேட்ட திரைப்படம் 500 திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாகவும், விஸ்வாசம் படம் 100 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே முதல் நாள் வசூல் தமிழக அளவில் விஸ்வாசம் முதலிடத்தை பிடித்தாலும், உலக அளவில் பேட்ட படத்திற்கே அதிக வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


From around the web