50 ரூபாய் வந்த மாஸ்டர் திரைப்படம்... என்ன கொடுமை சரவணா இது?

குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக ரூ 50 என்ற டிக்கெட் விலையில் படத்தை திரையிடுகிறார்களாம்.
 

மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 13 ல் தியேட்டர்களில் வெளியானது. 50 சதவீத இருக்கைகள் மட்டுமே என்ற நெருக்கடியான சூழ்நிலையில் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது.

அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். அதே வேளையில் படம் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டு வெளியிடப்பட்டது.

நல்ல வருமானத்தையும் படம் ஈட்டியது. இந்த வாரத்தில் 25 ம் நாளை படம் எட்டுகிறது.

இந்நிலையில் நெல்லை ராம் முத்து ராம் சினிமாஸ் நிறுவனம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக ரூ 50 என்ற டிக்கெட் விலையில் படத்தை திரையிடுகிறார்களாம்.

From around the web