ஒரு நிமிட வீடியோவில் 50 படங்களும் அதன் கேரக்டர்களும்: த்ரிஷா அசத்தல்

 

நடிகை த்ரிஷா கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடித்த ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் என்று தெரிந்தது. அதன் பிறகு அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தற்போது கூட அவர் கைவசம் 5 படங்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடித்த 50க்கும் மேற்பட்ட படங்களின் டைட்டில்கள் மற்றும் கேரக்டர் பெயர்கள் உள்ளன 

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஒரு நிமிட வீடியோவில் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் டைட்டில்கள் மற்றும் கேரக்டர்களை பென்சிலால் வரைந்து கொடுத்த ரசிகருக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web