50 கோடி நஷ்டத்தை சம்பாதித்த சைரா நரசிம்மா ரெட்டி!!

தெலுங்கு இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் சைரா நரசிம்மா ரெட்டி. இந்தப் படம் இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், ஆங்கிலேயருக்கே சவாலாக இருந்த சைரா நரசிம்மா ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு உருவான படமாகும். இந்தப் படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா, நயன்தாரா, அனுஷ்கா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது. ஹிந்தி, தமிழ், மலையாளம்,
 
50 கோடி நஷ்டத்தை சம்பாதித்த சைரா நரசிம்மா ரெட்டி!!

தெலுங்கு இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் சைரா நரசிம்மா ரெட்டி.

இந்தப் படம் இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், ஆங்கிலேயருக்கே சவாலாக இருந்த சைரா நரசிம்மா ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு உருவான படமாகும்.

இந்தப் படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா, நயன்தாரா, அனுஷ்கா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது.

50 கோடி நஷ்டத்தை சம்பாதித்த சைரா நரசிம்மா ரெட்டி!!

 ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இப்படம் வெளியானது,  மொழிகளிலும்  வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், அனைத்து மொழியில் இருந்தும் நடிகர்களை ஒப்பந்தம் செய்தனர்.

பாகுபலி போல் மாஸ் ஹிட் கொடுக்கும் என்று அனைவரும் நினைத்திருக்க, படம் படு தோல்வியினை சந்தித்தது.

திரைக்கதை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதே இப்படத்தின் தோல்விக்கு காரணம், ரூ.300 கோடி க்கு மிகப் பிரமாண்ட தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் போட்ட அசலைக்கூட எடுக்காமல் 50 கோடி நஷ்டத்தையே சந்தித்துள்ளது என்று தயாரிப்பாளர் பேட்டி அளித்து இருந்தார்.

அனுஷ்கா ஹீரோயினாக இருப்பார் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது ஏமாற்றமாக இருந்தது. விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாய் அமையவில்லை.

From around the web