கீர்த்தி சுரேஷால் 5 கோடி லாபம் பெற்ற தயாரிப்பாளர்: பரபரப்பு தகவல்

கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரூபாய் 3 கோடியில் தயாரானது. ஆனால் ஓடிடியில் இந்த படம் 8 கோடிக்கு விற்பனையானது. இதனால் கார்த்திக் சுப்புராஜ்க்கு ரூபாய் 5 கோடி லாபம் என்று கூறப்பட்டது இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள அடுத்த படம் ’மிஸ் இந்தியா’. தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை
 

கீர்த்தி சுரேஷால் 5 கோடி லாபம் பெற்ற தயாரிப்பாளர்: பரபரப்பு தகவல்

கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரூபாய் 3 கோடியில் தயாரானது. ஆனால் ஓடிடியில் இந்த படம் 8 கோடிக்கு விற்பனையானது. இதனால் கார்த்திக் சுப்புராஜ்க்கு ரூபாய் 5 கோடி லாபம் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள அடுத்த படம் ’மிஸ் இந்தியா’. தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை நரேந்திர நாத் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படமும் தற்போது நெட்பிளிக்ஸ்ஸில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த படத்தின் பட்ஜெட் 5 கோடி ரூபாய் என்ற நிலையில் இந்த படம் தற்போது ரூபாய் 10 கோடிக்கு ஓடிடியில் விற்பனையாகியுள்ளது. எனவே தயாரிப்பாளருக்கு ரூபாய் 5 கோடி லாபம் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளதால் இந்த படமும் நெட்பிளிக்ஸ்ஸிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web