’விக்ரம் வேதா’வின் 4வது வருட கொண்டாட்டம்: ரசிகர்கள் உற்சாகம்

 
vikram vedha

பிரபல நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து முதன்முதலாக நடித்த திரைப்படம் ’விக்ரம் வேதா’. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்தது என்பதும் உலகம் முழுவதும் சுமார் 60 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய தற்போது ஏற்பாடுகள் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்ரம் வேதா திரைப்படம் ரிலீஸ் ஆகி நான்கு வருடங்கள் இன்றுடன் முடிவடைந்தது அடுத்து மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் 

இதனை அடுத்து ‘விக்ரம் வேதா’ என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்குமே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web