போடு! 40 மில்லியன் வேற லெவல் பா!

கடந்த பொங்கல் அன்று தளபதி நடித்திருந்த "மாஸ்டர்" திரைப்படம் வெளியாகி வேற லெவலாக ஓடிக் கொண்டுள்ளது. இத்திரைப்படத்தினை இளம் இயக்குனர் "லோகேஷ் கனகராஜ்" இயக்கினார். இவரின் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியாகி வேற லெவலாக ஓடியது "கைதி" திரைப்படம். தற்போது இவர் நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் "கெட்டப்" மற்றும் "ஸ்டைல்" ரசிகர்களுக்கு சந்தோசத்தை கொடுத்தது. மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் "நடிகை மாளவிகா மோகன்", "நடிகை ஆண்ட்ரியா", "நடிகர் அர்ஜுன் தாஸ்" போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, "தளபதி "விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார் அவரது இசையில் வெளியான "வாத்தி கம்மிங்" என்ற பாடல் வைரலாக பரவியது. தற்போது இந்தப்பாடல் 40 மில்லியன் வியூஸை கடந்தது. இதனால் தளபதி விஜயின் ரசிகர்கள் ஆனந்தத்தில் கொண்டாடி வருகின்றனர்.