தேவலோக ஸ்ரீதேவி- இளையராஜாவின் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள்- பாகம் 4

இளையராஜா இசையில் பெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றுதான் 1990 ல்வெளிவந்த ஜகதேகே வீருடு அதிலோக சுந்தரி தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்திறங்கும் தேவலோக பெண் ஸ்ரீதேவி ஒரு மோதிரத்தால் கீழேயே இருக்க நேரிடுகிறது. பூமியில் டூரிஸ்ட் கைடாக இருக்கும் சிரஞ்சீவிக்கும் ஸ்ரீதேவிக்கும் காதல் வேறு வந்து விடுகிறது. திரும்பவும் ஸ்ரீதேவி தேவலோகம் சென்றாரா அவர்களின் காதல் என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமாக சொன்ன படம் இது. சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்த இப்படத்தை கோவலமேடி ராகவேந்திரராவ் இயக்கி
 

இளையராஜா இசையில் பெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றுதான் 1990 ல்வெளிவந்த ஜகதேகே வீருடு அதிலோக சுந்தரி தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்திறங்கும் தேவலோக பெண் ஸ்ரீதேவி ஒரு மோதிரத்தால் கீழேயே இருக்க நேரிடுகிறது.

தேவலோக ஸ்ரீதேவி- இளையராஜாவின் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள்- பாகம் 4

பூமியில் டூரிஸ்ட் கைடாக இருக்கும் சிரஞ்சீவிக்கும் ஸ்ரீதேவிக்கும் காதல் வேறு வந்து விடுகிறது.

திரும்பவும் ஸ்ரீதேவி தேவலோகம் சென்றாரா அவர்களின் காதல் என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமாக சொன்ன படம் இது.

சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்த இப்படத்தை கோவலமேடி ராகவேந்திரராவ் இயக்கி இருந்தார் 1990ல் இப்படம் வந்து பெரிய வெற்றி பெற்றது. இளையராஜாவின் மியூசிக்கலில் 1990ல் பல படங்கள் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க படங்களில் இதுவும் ஒன்று.

இப்படத்தில் இடம்பெற்ற அபனே தீயனி தாபா, ப்ரியாதாமா, அண்டலாலோ, மனபாரதமியோ, ஜனக்குட்டா, ஜெய்சிரஞ்சீவோ,யமஹோ பாடல்கள் பெரும் ஹிட் ஆகின.

வித்தியாசமான காதல் கதை என்பதால் இளையராஜா இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றையும் லட்டு மாதிரி போட்டிருந்தார்.

இந்த படம் காதல் தேவதை என்ற பெயரில் தமிழிலும் வந்தது. மறக்குமா செழும் மலரை காற்று மறக்குமா, சம்மதம் தந்துட்டேன் நம்பு, நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம் உள்ளிட்ட பாடல்கள் தமிழிலும் ஹிட் அடித்தன.

From around the web