37வது ஆண்டை தொட்ட சகலகலா வல்லவன்

கமலஹாசன் நடிப்பில் கடந்த 1982ம் ஆண்டு வந்த படம் சகலகலா வல்லவன். கமலஹாசனுக்கு கமர்ஷியலாக மிகப்பெரும் அந்தஸ்தை கொடுத்த படம் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் மிக அதிக நாட்கள் ஓடிய படமிது. எஸ்.பி முத்துராமன் இயக்க, தயாரித்த ஏவிஎம் நிறுவனத்துக்கு மிகப்பெரும் வசூலை கொடுத்த படமிது. அம்பிகா,சில்க்ஸ்மிதா, ரவீந்தர் என பலர் நடித்திருந்தனர். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து கலக்கும் இளைஞனாக கமல் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ பாடல் 37 வருடங்களாக தொடர்ந்து ஆங்கில
 

கமலஹாசன் நடிப்பில் கடந்த 1982ம் ஆண்டு வந்த படம் சகலகலா வல்லவன். கமலஹாசனுக்கு கமர்ஷியலாக மிகப்பெரும் அந்தஸ்தை கொடுத்த படம் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் மிக அதிக நாட்கள் ஓடிய படமிது.

37வது ஆண்டை தொட்ட சகலகலா வல்லவன்

எஸ்.பி முத்துராமன் இயக்க, தயாரித்த ஏவிஎம் நிறுவனத்துக்கு மிகப்பெரும் வசூலை கொடுத்த படமிது.

அம்பிகா,சில்க்ஸ்மிதா, ரவீந்தர் என பலர் நடித்திருந்தனர். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து கலக்கும் இளைஞனாக கமல் நடித்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ பாடல் 37 வருடங்களாக தொடர்ந்து ஆங்கில புத்தாண்டின் முதல் நாள் ஆட்டம் பாட்டத்துக்குரிய பாட்டாக விளங்குகிறது.

இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் இடம்பெற்ற நேத்துராத்திரி யம்மா, நிலாக்காயுது போன்ற பாடல்கள் இனிமையாகவும் 37 வருடத்துக்கு பிறகும் கிளுகிளுப்பேற்றும் வகையில் இந்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது.

இதே நாளில் 1982ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் 37 வருடங்களை கடந்து மக்கள் மனதில் நிலைத்துள்ளது.

From around the web