36 ஆண்டுகளை நிறைவு செய்த சலங்கை ஒலி

பிரபல தெலுங்கு பட இயக்குனர் கே.விஸ்வநாத். தெலுங்கில் இயக்கிய திரைப்படம் சாகர சங்கமம் அதன் தமிழாக்கமே சலங்கை ஒலியாக வந்தது. பரதத்தின் மேன்மையை மிக உயர்வாக விளக்கி சொன்ன படம் இது. கமலஹாசனும் ஜோடியாக ஜெயப்ரதாவும் இப்படத்தில் நடித்திருந்தனர். தமிழிலும் , தெலுங்கிலும் பல அவார்டுகளை வாங்கி குவித்தது இப்படம். கமலஹாசன் மிக சிறப்பானதொரு தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தார். இளையராஜாவின் இசைதான் இப்படத்துக்கு பெரும்பலமாக திகழ்ந்தது. இது மெளனமான நேரம், நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்,
 

பிரபல தெலுங்கு பட இயக்குனர் கே.விஸ்வநாத். தெலுங்கில் இயக்கிய திரைப்படம் சாகர சங்கமம் அதன் தமிழாக்கமே சலங்கை ஒலியாக வந்தது. பரதத்தின் மேன்மையை மிக உயர்வாக விளக்கி சொன்ன படம் இது.

36 ஆண்டுகளை நிறைவு செய்த சலங்கை ஒலி

கமலஹாசனும் ஜோடியாக ஜெயப்ரதாவும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

தமிழிலும் , தெலுங்கிலும் பல அவார்டுகளை வாங்கி குவித்தது இப்படம். கமலஹாசன் மிக சிறப்பானதொரு தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தார். இளையராஜாவின் இசைதான் இப்படத்துக்கு பெரும்பலமாக திகழ்ந்தது.

இது மெளனமான நேரம், நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள், போன்ற பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஓம் நமச்சிவாயா என்ற பாடலை போட்டு, பரதத்தில் எல்லாம் தெரிந்ததாக காட்டி கொள்ளும் திமிர் பிடித்த பெண்ணுக்கு கமல் பரதம் சொல்லி கொடுக்கும் காட்சிகள் தியேட்டரில் பலத்த கைதட்டலை பெற்றன.

அதே போல் கமல் கிணற்றின் மீது ஆடிக்கொண்டே பாடும் தகிட ததுமி தகிட ததுமி தந்தானா என்ற பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இன்றுடன் இப்படம் வந்து 36 வருடங்கள் ஆகிறது கடந்த 1983ம் வருடம் ஜூன் 3ம் தேதி இப்படம் வெளியாகியது

From around the web