3.33: பிக்பாஸ் நடிகரின் டைட்டில் இதுதான்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றவர்கள் திரையுலகில் பெரிதாக சாதிக்காத நிலையில் டைட்டில் வெல்லாதவர்களில் சிலர் திரை உலகில் நல்ல வாய்ப்புகளை பெற்று வருகின்றனர் 

அந்த வகையில் ஹரிஷ் கல்யாண், ரைசா, சாக்ஷி அகர்வால் போன்றோர் ஏற்கனவே பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடன இயக்குநருமான சாண்டி ஹீரோ ஆகி உள்ளார் 

sandy

சாண்டி ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சாண்டி நடிக்கும் படத்திற்கு 3.33 என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தை  நம்பிக்கை சந்துரு என்பவர் இயக்க உள்ளார்

இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாண்டி ஹீரோவாக நடிக்க இருக்கும் 3.33 என்ற படத்தின் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாகவும் அவருக்கு இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை தரும் என்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்


 

From around the web