கொரோனாவால் தொடர்புடையோர் 30 சதவீதம் தப்லிக் மாநாட்டில் தொடர்புடையோர்- மத்திய சுகாதாரத்துறை

கடந்த மாதம் லாக் டவுனுக்கு சில நாட்கள் முன் டெல்லியில் இஸ்லாமிய அமைப்பான தப்லீக் இ ஜமாத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தோனேசியாவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலமாகவே நோய் தொற்று பரவியது என மக்கள் மத்தியில் ஒரு பேச்சு உள்ளது. தமிழ்நாட்டிலும் 1000க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அரசு அறிவுறுத்தலுக்கு பின் சோதனைக்கு சென்றனர். இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் கூறியிருப்பதாவது:
 

கடந்த மாதம் லாக் டவுனுக்கு சில நாட்கள் முன் டெல்லியில் இஸ்லாமிய அமைப்பான தப்லீக் இ ஜமாத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தோனேசியாவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

கொரோனாவால் தொடர்புடையோர் 30 சதவீதம் தப்லிக் மாநாட்டில் தொடர்புடையோர்- மத்திய சுகாதாரத்துறை

இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலமாகவே நோய் தொற்று பரவியது என மக்கள் மத்தியில் ஒரு பேச்சு உள்ளது.

தமிழ்நாட்டிலும் 1000க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அரசு அறிவுறுத்தலுக்கு பின் சோதனைக்கு சென்றனர்.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் கூறியிருப்பதாவது:

மார்ச் மாத மத்தியில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கரோனா நோய்த் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை சோதனை செய்ததில் நாட்டில் 15 ஆயிரம் பேருக்கு தொற்று உள்ளது.

தப்லிக் ஜமாத் மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அல்லது அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது கரோனா பாதித்தவர்களில் 29.8 சதவீதமாகும்.

மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மூலம் 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுடன் தொடர்பில் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 1,992 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

From around the web